தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை இன்று வெளியீடு! - சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை

சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) மாணவர்களுக்கான 10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று (டிச. 31) மாலை வெளியாகவுள்ளது.

சிபிஎஸ்சி
சிபிஎஸ்சி

By

Published : Dec 31, 2020, 10:47 AM IST

Updated : Dec 31, 2020, 11:14 AM IST

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று (டிச. 31) மாலை வெளியிடப்பட உள்ளது. இதனை மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேரலையில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்புகிறார்.

இந்த முறை பிப்ரவரி மாதத்தில் வாரிய தேர்வுகள் நடத்தப்படாது என்று ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வு குறித்த விவரங்களை நிஷாங்க், கடந்த சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவர்கள், பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு! 2021ஆம் ஆண்டில் #CBSE போர்டு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவிப்பேன், காத்திருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 31, 2020, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details