தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் திருவனந்தபுரம்!

டெல்லி: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மண்டல அளவில் திருவனந்தபுரம் 99.28 விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

CBSE Class X results: Thiruvananthapuram tops, Delhi lags at 14th spot
CBSE Class X results: Thiruvananthapuram tops, Delhi lags at 14th spot

By

Published : Jul 15, 2020, 11:59 PM IST

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியிடப்பட்டது. இந்திய அளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,73,015 மாணவ, மாணவிகள் எழுதியதில் 17,13,121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இம்முறை 91.46 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.36 விழுக்காடு அதிகமாகும். இம்முறையும், இந்தத் தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதமாக 3.17 விழுக்காடு அதிகமாக உள்ளது.

90.14 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் 93.31 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 78.95 விழுக்காடு மூன்றாம் பாலினத்தனர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details