சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அதேபோல், செய்முறை தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!
டெல்லி: சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார்.
தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. வழக்கமாக, செய்முறை தேர்வு ஜனவரி மாதமும் எழுத்துமுறை தேர்வு பிப்ரவரி மாதமும் நடைபெறும். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படுவது தள்ளிப்போனது.
தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பொது தேர்வுக்கு முந்தைய தேர்வுகளை பல பள்ளிகள் இணையம் வழியாக நடத்தியிருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து அக்டோபர் 15ஆம் தேதி, பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன என்பது நினைவுக் கூரத்தக்கது.