வெளியான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
12:43 July 13
டெல்லி: 12ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகளை இணையதளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது. அதில், சில தேர்வுகள் நடந்துமுடிந்திருந்த நிலையில், கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சில தேர்வுகள் நடைபெறவில்லை. இதையடுத்து விடுபட்ட தேர்வுகளை நடத்த மத்திய அரசு மும்முரமாக இறங்கியபோது, கரோனாவின் தீவிரம் காரணமாக தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன.
மேலும், அந்தத் தேர்வுகளுக்கு, மாணவர்கள் முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், அகமதிப்பீடு ஆகியற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் மதிப்பெண் கணக்கிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் cbseresults.nic.in, results.nic.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம்.