இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இயல்பு நிலை திரும்ப சில காலம் ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு, சுங்கத் துறையிடம் சுங்க பத்திரம் சமர்ப்பிக்காமல் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
சுங்க பத்திரம் இல்லாமல் மே 15ஆம் வரை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அனுமதி - trade
டெல்லி: சுங்கப் பத்திரங்கள் சமர்ப்பிக்காமல் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் அறிவித்துள்ளது.
CBIC
ஆனால், இந்தக் காலத்தில் சமர்ப்பிக்கப்படாத பத்திரங்களை மே 30ஆம் தேதிக்குள் சுங்கத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'ஆர்பிஐ அறிவிப்பை பெருநிறுவனங்கள் பயன்படுத்தினால் பணப்புழக்கம் எகிறும்!'