ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிஐ அதிகாரிகள் தற்போது மீண்டும் உத்தரப் பிரதேசம் சென்றுள்ளனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் ஹத்ராஸில் உள்ள புல்காரி கிராமத்திலுள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரது குடும்பத்தினரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கண்டெடுக்கப்பட்ட இடம், ஏரியூட்டப்பட்ட இடம் ஆகியவற்றுக்கும் சென்று அவர்கள் விசாரணை செய்தனர்.