கால்நடை கடத்தல் விவகாரம் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் காலையில் தொடங்கப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். நகரின் இரண்டு பட்டய கணக்காளர்களின் அலுவலக வளாகங்கள், குடியிருப்புகளில் சோதனைகள் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
கால்நடை கடத்தல் வழக்கு: கொல்கத்தாவில் சிபிஐ தேடுல் வேட்டை
கொல்கத்தா: கால்நடை கடத்தல் விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் ஐந்து இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கால்நடை கடத்தல் வழக்கு: கொல்கத்தாவில் சிபிஐ தேடுல் வேட்டை
இந்தியா-வங்கதேசம் எல்லையில் கால்நடை கடத்தல் தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் கமாண்டன்ட் உள்ளிட்ட மூன்று பேர் மீது செப்டம்பர் 23ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, முர்ஷிதாபாத், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத், பஞ்சாபின் அமிர்தசரஸ், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் ஆகிய 13 இடங்களில் சிபிஐ தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.