டெல்லி:எஸ்.பி.ஐ, பஞ்சாப், சிந்து வங்கி ஆகிய வங்கிகளில் மோசடி செய்ததாகக்கூறி மத்திய புலனாய்வு பிரிவினர் இரண்டு வெவ்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மற்றும் மும்பையில் 19 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனனர்.
இதுதொடர்பாத சிபிஐ அலுவலர் அளித்த தகவலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 67.07 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட், நிறுவனத்தின் இயக்குநர்கள், சிவ அரசு ஊழியர்கள் மீது வங்கியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக மும்பை மற்றும் கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட் இயக்குநர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதாகக் கூறினார்.
மேலும், 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எஸ்.பி.ஐ-வங்கிக் கணக்கை மோசடி செய்வதற்கும், பணத்தை மாற்றுவதற்கும், பயனாளர்களை ஏமாற்றும் நோக்கிலும் பயன்படுத்தி வந்தனர் என வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டதாகக் கூறினார்.