கர்நாடக மாநிலம், சதாசிவ் நகரிலுள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வீட்டில் இன்று (அக்.05) காலை சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் எம்.பி. வீட்டிலும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
மேலும், பெங்களூரிலுள்ள டோடலஹள்ளி, கனகபுரா, சதாசிவா நகர் ஆகிய இடங்களில் உள்ள டி.கே. சிவகுமாரின் வீடுகள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 14 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் சிபிஐ இதுவரை ரூ. 50 லட்சத்தை கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்வீட் செய்துள்ளார். அதில், 'மோடி-எடியூரப்பா ஆகிய இரட்டையர்களின் கைப்பாவையாக சிபிஐ திகழ்ந்து, டி.கே.சிவகுமாரை சோதனை செய்வது கண்டிக்கத்தக்கது. எடியூரப்பா அரசாங்கத்தில் ஊழல் அடுக்குகளை சிபிஐ கண்டுபிடிக்க வேண்டும்.