நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிபிஐ இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த சோதனையில், முக்கிய தடயங்கள், ஆவணங்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை! - சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை
ஊழல் புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
குறிப்பாக இந்த சோதனை ரயில்வே, நிலக்கரி,சுரங்கத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் அதிகாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கெளகாத்தி, ஷில்லாங், சண்டிகர், கொல்கத்தா, புவனேஸ்வர், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, போபால், ராய்ப்பூர், நாக்பூர், ஜெய்ப்பூர், விஜயவாடா, கொச்சின், கொல்லம் உள்ளிட்ட 150 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.