ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, சிதம்பரம் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவில்லை.
ப. சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ-யும் லுக் அவுட் நோட்டீஸ்? - லுக் அவுட் நோட்டீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில் தற்போது சிபிஐ-யும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
former Minister P. Chidambaram
மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறி ஏற்கனவே அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தற்போது சிபிஐயும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.