தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டு நாள்களுக்குள் விசாரணை: டி.கே. சிவக்குமார் ஆஜராக சிபிஐ சம்மன்!

பெங்களூரு: இரண்டு நாள்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

CBI issued summons to DKS for attend a inquiry within 2 days
CBI issued summons to DKS for attend a inquiry within 2 days

By

Published : Oct 6, 2020, 3:18 PM IST

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிலும், கர்நாடகா, மும்பை, டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் சிபிஐ நேற்று (அக். 6) விடிய விடிய சோதனை நடத்தியது.

இந்நிலையில், இது குறித்து இன்று (அக். 7) முதல் விசாரணை தொடங்குவதால், வரும் இரண்டு நாள்களுக்குள் விசாரணையில் கலந்துகொள்ள வேண்டும் என டி.கே. சிவக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், கர்நாடகாவில் இடைத்தேர்தல் வருவதால், இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.கே. சிவக்குமார் வழக்கில் அடுத்தது என்னவாக இருக்கும்?

  • சொத்து பற்றிய தகவல்களை வழங்க டி.கே.எஸ்.-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  • தேடலின்போது பெறப்பட்ட தகவல்கள் சரிபார்ப்பு.
  • கைப்பற்றப்பட்ட பணம் ஊழல் அல்ல என்று ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விசாரணை நடவடிக்கையை மதிக்காவிட்டால், டி.கே.எஸ். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்.
  • டி.கே.எஸ்-ஐ காப்பாற்ற அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதையும் படிங்க...'ஆட்சி நடத்தும் அருகதையை யோகி அரசு இழந்துவிட்டது!'

ABOUT THE AUTHOR

...view details