தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதி நிறுவன மோசடி வழக்கு: பல மணி நேரம் சிபிஐ விசாரணை! - மம்தா பேனர்ஜி

ஷில்லாங்: நிதி மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை பல மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ராஜீவ் குமார்

By

Published : Feb 10, 2019, 12:05 AM IST

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தக்கூடாது என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உதவியை சி.பி.ஐ நாடியபோது, ஷில்லாங் நகரில் சி.பி.ஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்று ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜரானதும் காலை 11.30 மணியளவில் சிபிஐ விசாரணை தொடங்கியது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் இரவு 7.30 மணி அளவில் ராஜீவ் குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த விசாரணை நாளையும் தொடரும் என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details