தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவலில் கைதி உயிரிழப்பு: காவலர்கள் 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்! - நிதி மோசடி வழக்கு

திருவனந்தப்புரம்: காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த விவகாரத்தில், 9 காவல் துறை அலுவலர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதி
கைதி

By

Published : Feb 5, 2021, 3:16 PM IST

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்த விவகாரத்தில், 9 காவல் துறை அலுவலர்கள் மீது தலைமை நீதித்துறை நடுவர் கொச்சி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின் படி, ஜூன் 21, 2019 அன்று சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார், காவலர்கள் தாக்கியதில் இறந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் 152 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 145 ஆவணங்களையும், 32 பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் வேணுகோபால், துணை எஸ்.பி. ஷாம்ஸ், சிறை அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீதும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு எண்டே இல்லையா... ஜெர்மனியில் நுழைந்த மற்றொரு வகை கரோனா!

ABOUT THE AUTHOR

...view details