ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராகவில்லை.
இதையடுத்து அவர் வருகிற 24ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் வழக்கறிஞர், ஜெகன் மோகன் முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு ஏராளமான அலுவலக பணிகள் உள்ளது.
ஆகவே அவர் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி வருகிற 24ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2012ஆம் ஆண்டு கைதாகி சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 15 மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சரின் கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்