மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப வன்பொருள் வழங்குவதற்காக ஆறு கோடியே 76 லட்சம் போலி பில்களை உருவாக்கியதாக நான்கு கடற்படை அலுவலர்கள், 14 பேர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கேப்டன் அதுல் குல்கர்னி, தளபதிகள் மந்தர் காட்போல், ஆர் பி சர்மா, கடைநிலை அலுவலர்கள் எல்ஓஜி (எஃப் & ஏ) குல்தீப் சிங் பாகேல் ஆகியோர் ஏழு மோசடி பில்களை ரூ .6.76 கோடிக்கு தயாரித்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அலுவலர்கள்கள் அனைவரும் கடற்படை அலுவலர்களை மோசடி செய்து பொதுப் பணத்தை கொள்ளையடிப்பதற்கும தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.