ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது. இதேபோல் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார். இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி விவரங்களைப் பெற சிபிஐ முயற்சி செய்துவருகிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : 5 நாடுகளிடம் சொத்து விவரங்களை கேட்கிறது சிபிஐ! - CBI ask of P Chidambaram
டெல்லி: ப.சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு ஐந்து நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
P Chidambaram
இந்நிலையில் ஸ்விசர்லாந்து, சிங்கப்பூர், பெர்முடா, பிரிட்டன் மற்றும் மொரிசியஸ் ஆகிய ஐந்து நாடுகளின் அலுவலர்களுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. அங்கிருந்து விவரம் கிடைத்தால் அது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கின் துருப்புச்சீட்டாக இருக்கும் என கருதப்படுகிறது.