ஆந்திரப் பிரதேசம், கோண்டயாகரி நீரோடை பகுதியில் நேற்று (அக்.22) இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சித்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தனது குடும்பத்தினரோடு கனிகிரி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார்.
இரவு 12 மணியளவில் அவர் வந்தபோது, வழியில் இருந்த ஓடையைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது கார் திடீரென வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காரில் பிரதாப், அவரது மனைவி ஷியாமலா, மகள் சாய் வினிதா, உறவினர் ஒருவர், ஓட்டுநர் என ஐந்து பேர் இருந்துள்ளனர்.