தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவிரி நீர் வருகை: வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம் - காவிரி நீர் காரைக்காலுக்கு வருகை

புதுச்சேரி: காவிரி நீர் காரைக்காலுக்கு வருவதையொட்டி, 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 92 கிலோ மீட்டர் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கிவைத்தார்.

காவிரி நீர் காரைக்காலுக்கு வருகை: வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

By

Published : Jun 16, 2020, 3:01 AM IST

மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை தொடர்ந்து, காரைக்காலுக்கு காவிரி நீர் வர உள்ளதால் அங்குள்ள ஆறு, கிளை பாசன வாய்க்காலை தூர்வாரும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜுன் 15ஆம் தேதி காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருநள்ளாறு, நெடுங்காடு, டிஆர் பட்டினம் பகுதிகளிலுள்ள 92 கிலோ மீட்டர் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறை அலுவலர்கள் தொடங்கினர்.

42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பொதுப்பணித் துறையால் தூர்வாரும் இப்பணிகள் அனைத்தும் 10 நாள்களுக்குள் முடிக்கப்படும் என கமலக்கண்ணன் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசால் காரைக்காலுக்கு வழங்கப்படும் ஒரு டிஎம்சி தண்ணீரைக் கொண்டு 2500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யும் காரைக்கால் பகுதி விவசாயிகள் இதன்மூலம் பயன்பெற உள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருள்கள் அனைத்தும் காரைக்கால் வேளாண் கல்லூரி மூலம் விவசாயிகள் பெற்றுக்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details