தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் இன்று கூடும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்! - காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்

டெல்லி: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

டெல்லியில் இன்று கூடும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்...!
டெல்லியில் இன்று கூடும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்...!

By

Published : Oct 9, 2020, 9:10 AM IST

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர் மாதந்தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில், கடந்த செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு உபரி நீரைத் திறந்துவிட்டு, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளதாக தமிழ்நாடு அலுவலர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொள்ளும் தமிழ்நாடு அலுவலர்கள், சம்பா சாகுபடி பருவம் தொடங்கியுள்ளதால், முறைப்படி நீர் திறக்க கர்நாடக அரசிற்கு உத்தரவிடும்படி வலியுறுத்தியுள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 2.44 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இம்மாதம் 20.2 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...நில எடுப்பு அசல் வழக்குகளை விரைந்து தீர்வு காண நடவடிக்கை - சிப்காட்

ABOUT THE AUTHOR

...view details