தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு திறந்துவிட்டது.
கனமழை: தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீர் அதிகரிப்பு! - டெல்டா விவாசாயிகள்
பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவை கர்நாடகா இரண்டாயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
karnataka
இந்நிலையில், இன்று நீரின் அளவை இரண்டாயிரத்து 500 கன அடியாக உயர்த்தி திறந்துள்ளது கர்நாடக அரசு. அதன்படி, தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து இரண்டாயிரம் கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருவதால் நீர்வரத்தானது மேலும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.