மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிர கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் முழுஅடைப்பு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநிலத்தில், காவிரி மீட்பு குழுவினர் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மோடி அரசைக் கண்டித்தும் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் கண்டன பேரணியிலும் ஈடுபட்டனர்.