தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிற்பகலில் கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் - Cauvery management board

டெல்லி: ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடகா திறந்துவிடாத நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது.

காவிரி

By

Published : Jun 20, 2019, 10:25 AM IST

காவிரியில் இருந்து ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் மாத தொடக்கத்தில் 4.5 டி.எம்.சி. நீர் வரவேண்டிய நிலையில், 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்துவிட்டது.

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான தண்ணீர் திறந்து விடக்கோரியும் திறந்து விடாததால், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details