போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு நகரின் உடிமோத் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் அவரது உடமைகளை அளிக்கும் படி மிரட்டியுள்ளனர்.
துப்பாக்கி முனையில் பணம் பறித்தக் கொள்ளையர்கள் - சிசிடிவி வெளியீடு - மர்ம கும்பல்
மத்திய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், காரில் வந்தவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்துக்கொண்டு தப்பியோடியச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச கொள்ளை சம்பவம்
அந்நபர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, அருகில் இருந்த மர ஏணியைக்கொண்டு காரையைும் அவரையும் தாக்கிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.