விலங்குகள் நல ஆர்வலரான மேனகா காந்தி ட்விட்டரில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “பூனைகள் கரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என தெரிவித்துள்ளார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது. அதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. உங்கள் பூனைகள் பூரண பாதுகாப்பானவை” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வன உயிரியல் பூங்காவிலுள்ள புலிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உலகிலுள்ள அனைத்து வன விலங்கு சரணாலயத்திலும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது.