மத்தியப் பிரதேசத்தில் 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியாக உள்ள அந்த இடங்களுக்கும் உயிரிழந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 28 எட்டு தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
வாக்குக்கு பணம் அளிக்கும் காங்கிரஸ்! - வாக்குக்கு பணம் அளிக்கும் காங்கிரஸ்
போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வாக்குக்கு பணம் அளிப்பதாக பாஜக புகார் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சண்வார் சட்டப்பேரவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், வாக்குக்கு பணம் அளித்து வருவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.
ஹத்தோட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள பாஜகவினர், அது குறித்த வீடியோ பதிவினையும் அளித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் உமேஷ் சர்மா தேர்தல் அலுவலருக்கு அளித்த புகாரில், "காங்கிரஸ் வேட்பாளர் பிரேமசந்த் குட்டுவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து தலைவர் கங்காரியா பணம் அளித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.