தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவை மீறியதாக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவை மீறியதாக காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

puducherry mla
puducherry mla

By

Published : Mar 26, 2020, 1:18 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சூழலில் மக்கள் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் வலம் வருகின்றனர்.

கரோனா தொற்று அறிகுறி பற்றிய புரிதல் இல்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் நல்ல விதமாக அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார் நேற்று நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு இலவசமாக காய்கறிகள் அடங்கிய பை ஒன்றினை வழங்கினார்.

இதற்கு, சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு சட்டத்திற்கு எதிராக கூட்டத்தை கூட்டியதால், பேரிடர் மேலாண்மைச் சட்ட உள்ளிட்ட பிரிவுகளில் ஜான் குமார் மீது ஊருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், சட்டத்தை மீறியதால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details