தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜவாத் அக்தருக்கு எதிராக புகார்!

பாட்னா: தேச விரோத கருத்துக்களை தெரிவித்ததாக பாடலாசிரியர் ஜவாத் அக்தருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Javad
Javad

By

Published : Mar 5, 2020, 6:54 PM IST

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பாடலாசிரியர் அக்தர் பிப்ரவரி 27ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

ஆனால், காவல் துறை ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது. அவரின் பெயர் தாஹிர். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினருக்கு நன்றி" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவை பலர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், தேச விரோத கருத்துக்களையும், இரு மதத்தவரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் ஜாவத் கருத்தை வெளியிட்டதாகவும் ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதனிடையே, தேச விரோத கருத்துக்களை தெரிவித்த ஜாவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தலைமை மாவட்ட நீதிபதி தாகூர் அமன் குமாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை மார்ச் 25ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: டெல்லியில் விரல் மூலம் வருகைப்பதிவு செய்ய தற்காலிகத் தடை

ABOUT THE AUTHOR

...view details