தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து தீவிரவாதம்: கமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

டெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கமல்ஹாசன் பேசியதற்கு எதிரான வழக்கு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

KamalHaasan

By

Published : Nov 22, 2019, 2:57 PM IST

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின்போது மே12ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என பேசியிருந்தார். அவரது இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கமலின் இந்த பேச்சுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் உள்ள இந்து சேனா அமைப்பு கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தது. தேர்தல் விதிமுறைகளை மீறி கமல் பரப்புரையில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க அந்த அமைப்பு வலியுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் அளித்திருந்தது. இதனிடையே இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், டிசம்பர் 9ஆம் தேதிக்கு விசாரணையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க...

கமலுக்கு இன்று அறுவை சிகிச்சை - கவிதையால் ஆறுதல் சொன்ன சினேகன்

ABOUT THE AUTHOR

...view details