தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தை தத்தெடுப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு! - மத்திய அரசு

கரோனா தொற்று காரணமாக குழந்தையை தத்தெடுப்பு செயல்முறைக்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் அறிவித்துள்ளது.

CARA adoption child adoption COVID-19 குழந்தை தத்தெடுப்பு மத்திய அரசு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம்
குழந்தைத் தத்தெடுப்பு

By

Published : Jun 5, 2020, 4:58 AM IST

இது தொடர்பாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், அனைத்து மாநில தத்தெடுப்பு வள முகவர் நிலையங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுகள், சிறப்பு தத்தெடுப்பு முகவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மே 29ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், குழந்தையை தத்தெடுப்பதற்கான தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக கூறியுள்ளது.

குழந்தையை தேர்ந்தெடுக்கும் அனைத்து படிநிலைகளும் முடிந்த பின்னர் நீதிமன்ற அனுமதிக்கான மனுத்தாக்கல் செய்யும் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடலோர மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details