தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரின் டயரில் பதுக்கப்பட்டிருந்த  ரூ 2.30 கோடி பறிமுதல்! - வருமானவரித்துறை

பெங்களூரு: காரின் டயருக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ 2.30 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் காரின் டயரிலிருந்து ரூ 2.30 கோடி பணம் பறிமுதல்!

By

Published : Apr 21, 2019, 11:45 AM IST

Updated : Apr 21, 2019, 2:03 PM IST

கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட பொதுத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்தது. இரண்டாம் கட்டமாக பாகல் கோட்டை, விஜயாப்புரா உட்பட 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அரசியல் கட்சிகள் பல்வேறு விதங்களில் முயற்சித்து வருகின்றன. இதனைத் தடுக்க காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளைத் சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சிமோகா செல்லும் சாலையில் கோடிக்கணக்கில் பணம் எடுத்துச் செல்லப்படுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த காரை மடக்கி, வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், காரின் டயருக்குள் ரூ 2.30 கோடி கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சரியான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் இப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

Last Updated : Apr 21, 2019, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details