கர்நாடக மாநிலம் கலாபுராகி பகுதயில் இன்று(செப்.27) காலை சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மிது கார் ஒன்று மோதி விபத்துகுள்ளானது. அந்த விபத்தில் காரில் வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முதல்கட்ட விசாரணையில், "உயிரிழந்தவர்கள் அலண்டா தாலுகாவைச் சேர்ந்த இர்பானா பேகம் (25), ருச்சியா பேகம் (50), அபேதாபி பேகம் (50), முனீர் (28), முகமது அலி (38), சவ்கத் அலி(29), ஜெயச்சுனாபி (60) என்பது தெரியவந்தது.