தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலத்தை உடைத்து பறந்த கார், ஒருவர் மரணம் - வீடியோ - Hyderabad Bridge aacident

ஹைதராபாத்: புதிதாக திறக்கப்பட்ட பசுமை மேம்பாலத்தில் இருந்து கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car-falls-off-newly-inaugurated-biodiversity-flyover-in-hyderabad-one-dead

By

Published : Nov 23, 2019, 5:58 PM IST

Updated : Nov 23, 2019, 6:04 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி பகுதியில் பசுமை மேம்பாலம் ஒன்று சில நாட்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது. அந்த மேம்பாலத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுகிறது.

பாலத்திலிருந்து கீழே விழுந்த கார்

இந்த விபத்திற்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள், செங்குத்தான வளைவுகள், சிக்னல்களுமே காரணம் என பொதுமக்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: கண் சிமிட்டும் நேரத்தில் மானை கவ்விய அனகோண்டா..!

Last Updated : Nov 23, 2019, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details