ஆந்திர மாநிலம் நகரி அருகே கண்ணா மெட்டா என்னும் பகுதியில் திருப்பதியிலிருந்து வந்துகொண்டிருந்த காரும், காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி! - கார் பேருந்து மோதி விபத்து
அமராவதி: நகரி அருகே தமிழ்நாடு அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
car-bus
விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ஜனா, பாலாஜி, அனந்த் குமார் உள்ளிட்ட நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து கூடுதல் தகவல் பெற காவல் துறையினர் தீவிர விசாரணை மூலம் மேற்கொண்டுவருகின்றனர்.