புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி இன்று காலை ஏழு மணியளவில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் மீது, எதிர்திசையில் வேகமாகவந்தகார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி! - புதுச்சேரி கார் பேருந்து மோதிய விபத்து
புதுச்சேரி : கிருமாம்பாக்கம் பகுதியில் அரசுப் பேருந்தின் மீது வேகமாக வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்து மீது கார் மோதிய விபத்து
மேலும், இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : லாரியின் மீது மோதிய அரசு பேருந்து மூவர் பரிதாப பலி!