தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மராட்டிய மண்ணில் அமைச்சராகும் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்? - சியோன் கோலிவாடா தொகுதி

மும்பை: மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

captain tamilselvan

By

Published : Oct 26, 2019, 3:33 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மும்பையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சியோன் கோலிவாடாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக வெற்றி வாகைச் சூடியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் 30 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வன் மீது பாஜக தலைமைக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. அந்த நம்பிக்கையில் அமித் ஷா இரண்டாவது முறையாக எம்எல்ஏ சீட் வழங்கியுள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிராவில் அமையவுள்ள புதிய அரசில் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்ச்செல்வன் மீது தேவேந்திர பட்னாவிஸும் நல்ல மரியாதை வைத்துள்ளாராம். இதனால் மராட்டிய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details