தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

''நம்ம கேண்டீன்'' ஹோட்டல் தொழிலில் கால்பதித்த பழங்குடி மக்கள்! - ட்ரெக்கிங் செல்லும் பயணிகள்

சாம்ராஜாநகர: பந்திபூர் காடுகளுக்குச் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, நல்ல உணவுகள் கிடைக்கும் வகையில் பழங்குடி இனமக்கள் ஹோட்டல் தொடங்கி நடத்திவருகின்றனர்.

canteen-opened-at-bandipur-forest-tribal-people-has-entered-into-hotel-business
canteen-opened-at-bandipur-forest-tribal-people-has-entered-into-hotel-business

By

Published : Dec 7, 2019, 10:41 AM IST

Updated : Dec 7, 2019, 11:51 AM IST

கர்நாடக மாநிலம் சமராஜாநகர மாவட்டம் பந்திபூர் காடுகளுக்குள் ட்ரெக்கிங் வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த காடுகளுக்குச் சுற்றுலா வரும் நபர்களுக்கு, சரியான உணவு கிடைக்காததால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவந்தனர்.

இந்தக் குறைகளை நிறைவு செய்யும்வகையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவினர் கேண்டீன் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டனர். இதற்காகச் சுற்றுலா வரும் மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தனித்துவமான உணவுகள் கிடைக்கும் வகையில் பழங்குடியின மக்களால் ''நம்ம கேண்டீன்'' என்ற ஹோட்டலைத் தொடங்கியுள்ளனர்.

பழங்குடியின மக்கள் ஹோட்டல் தொழிலில் கால் பதித்துள்ள சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

''நம்ம கேண்டீன்'' ஹோட்டல் தொழிலில் கால்பதித்த பழங்குடி மக்கள்

இதுகுறித்து வனசரகர் பாலச்சந்திர பேசுகையில், தமிழ்நாட்டின் முதுமலை காடுகளில் பழங்குடி இனமக்கள் செய்ததைப் போல், இங்கும் பழங்குடி இனமக்களுக்கு கேண்டீன் தொடங்க அனுமதியளித்துள்ளோம் என்றார்.

மேலும் பழங்குடி இனமக்கள் பேசுகையில், இந்த கேண்டீன் தொழில் எங்களின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிவருகிறது. இந்த கேண்டீனில் காலை மற்றும் மதிய நேரங்களில் உணவுகள் தயாரிப்பதோடு, மாலை நேரங்களில் திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் எனக் கூறினர்.

இதையும் படிங்க: மலைவாழ் மக்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி: தொடங்கி வைத்த நாரயணசாமி!

Last Updated : Dec 7, 2019, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details