தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை சமாளிக்க தயாராகிறதா தடுப்பூசி? ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குனர் பிரத்யேக பேட்டி - கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று

ஹைதராபாத்: அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான். தொடர்ச்சியாக தொற்று பதிவாகிவருகிறது. ஆராய்ச்சிகள் துரிதமாக நடக்க அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும். இந்த வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை உலகளாவிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்க முயற்சிகள் நடந்துவருகிறது என்று நான் நம்புகிறேன்.

Ex-ICMR ADG  Dr Sujit Kumar Bhattacharya  Dipankar Bose,  interview  ETV Bharat  coronavirus  COVID-19  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  டாக்டர் சுஜித் குமார் பட்டாச்சார்யா  ஈடிவி பாரத்  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று  பி.சி.ஜி., தடுப்பூசி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
Ex-ICMR ADG Dr Sujit Kumar Bhattacharya Dipankar Bose, interview ETV Bharat coronavirus COVID-19 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டாக்டர் சுஜித் குமார் பட்டாச்சார்யா ஈடிவி பாரத் கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று பி.சி.ஜி., தடுப்பூசி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

By

Published : May 3, 2020, 7:56 PM IST

Updated : May 4, 2020, 9:36 AM IST

கரோனா வைரஸ் பரிசோதனைக்கான அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்), முன்னாள் கூடுதல் பொது இயக்குனர் டாக்டர் சுஜித் குமார் பட்டாச்சார்யா ஈடிவி பாரத் செய்தியாளர் தீபங்கர் போஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறையில் நிபுணராகவும், காலரா மற்றும் நுண்ணுயிர் நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் (என்ஐசிஇடி) முன்னாள் இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் மற்றும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாடு எவ்வாறு வெல்ல முடியும் என்பதையும் கூறினார்.

அந்த நேர்க்காணலின் உரையாடல் வருமாறு:

கேள்வி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். கரோனா வைரஸின் புதிய வகையான கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு, சார்ஸ் வைரஸை நினைவுப்படுத்துவதாக கருத்துகள் எழுகிறது. வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு டி.என்.ஏ. மரபணு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இதெல்லாம் உங்களுக்கு ஏதேனும் உறுதியளிக்கிறதா?

  • பதில்: ஆம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இரண்டு ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவ அறிக்கையின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள். இது ஒரு முதல்கட்ட சோதனைதான். ஏராளமான சோதனைகள் மேலும் சோதனைகளுக்கு தயாராக உள்ளன. இந்தச் சோதனை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 80 விழுக்காடு சோதனை நிறைவுப் பெற்றாலும் தடுப்பூசி தயாராகிவிடும். பாதிப்புகள் அதிகம் இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைத் தயாரிக்க வேண்டியது அவசியம். இதற்கு இந்தியா ஒரு பங்களிப்பை அளிக்கும். இந்த தடுப்பூசி முதலில் இங்கிலாந்து குடிமக்களுக்கும், பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் வழங்கப்படும். நாம் அதற்காக காத்திருக்க வேண்டும் அல்லது திட்டவட்டமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

கேள்வி: நாட்டில் கரோனா பாதிப்பு 4.5 விழுக்காடு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

  • பதில்: ஆம். இருப்பினும், சோதனை மாதிரிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அது கவனிக்கப்பட வேண்டும். நாம் அனுமானங்களை கொண்டிருக்க கூடாது.

கேள்வி: நாடு முழுவதும், குறிப்பாக கிராமங்களில் அதிக சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சோதனை அதிகமாக இல்லாததால் நமக்கு உண்மையான பாதிப்பாளர்களின் அளவு கிடைக்கவில்லையா?

  • பதில்: அது சரி. கூடுதல் சோதனைகள் தேவை என்பதில் சந்தேகமில்லை. சோதனைகள் மற்றும் சோதனை சார்ந்த தரவுகள் மட்டுமே இவ்விவகாரத்தில் சிறந்த யோசனையை வழங்க முடியும். பாதிப்புகளை குறைக்க மக்கள் அணுகும் முறை, தகுந்த இடைவெளி தூரத்தை பராமரித்தல் ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்.

கேள்வி: சீனக் கருவிகள் இயற்கையில் தவறானவை என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ள நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றினை விரைந்து கண்டுபிடிக்க என்ன வழி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • பதில்: இந்த வைரஸின் பரவலைக் கண்டுபிடிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஒரே ஒரு வழி சோதனைதான். இது ஒரு வழியைக் கண்டுபிடிப்பதைப் பற்றியது அல்ல. மாறாக ஒரு தீர்வை அடைய முயற்சிப்பது. நிச்சயமாக, உள்நாட்டு சோதனை கருவிகளை உருவாக்க வேண்டும். இதில், டெல்லி ஐஐடியின் பணிகள் பாராட்டத்தக்கது. மேலும், மிக விரைவில் சோதனைக் கருவிகளும், மலிவு விலையில் சந்தையில் கிடைக்க வேண்டும்.

கேள்வி: கரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உங்களின் பரிந்துரை என்ன?

  • பதில்: கரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இரண்டு பரிந்துரைகள் என்னிடம் உள்ளது. முதலில் தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சாத்தியமான பரந்த கருத்துகளை பெற மருத்துவ நிபுணர்கள், ஐசிஎம்ஆர் மருத்துவ விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்த வேண்டும்.

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியை தொடர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும். ஆராய்ச்சிகள் துரிதமாக நடக்க அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும். இந்த வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை உலகளாவிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகிறது என்று நான் நம்புகிறேன். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கேள்வி: பி.சி.ஜி., தடுப்பூசி மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகள் இந்த நோயிக்கு எதிராக அதிகமாக வேலை செய்யவில்லை, தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகிறது. இதற்கு காரணம் என்ன?

  • பதில்: பி.சி.ஜி குறிப்பிட்ட ஆன்டிஜென்களுக்கு எதிராக தாமதமாக எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. கோவிட்-19 க்கு எதிராக இது பயனுள்ளதாக இருப்பதற்கான எந்த காரணத்தையும் நான் காணவில்லை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இதயப் பிரச்னை, நச்சுத்தன்மை, மற்றும் ஆபத்தான எதிர்விளைவுகளை உருவாக்கக்கூடியது. சமீபத்திய ஆய்வுகள் இது பயனுள்ளதாக இல்லையென்று கூறுகின்றன. வருங்காலங்களில் மாற்று மருந்துகளை கண்டறிய, பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்க இது உதவலாம்.

கேள்வி: நாட்டின் முடக்கம் நாளுக்கு நாள் நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு முடிந்ததும் வயதானவர்கள் பாதிக்கப்படும் குழுவாக இருப்பார்களா? அல்லது வேறு யாரேனும் பாதிக்கப்படுவார்களா?

  • பதில்: அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான். ஏனெனில் தொடர்ச்சியாக தொற்று பதிவாகிவருகிறது. எவ்வாறாயினும், பொருளாதார விளைவுகளை கருத்தில் கொண்டு, ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் முன்மொழியப்பட்டபடி இந்த ஊரடங்கு ஒரு கட்டமாக அகற்றப்பட வேண்டும். மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் நாங்கள் கையாள்வதால், இது பகுதி பகுதியாக இருத்தல் அவசியம். திடீரென ஊரடங்கை திரும்பப் பெறுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.!

இவ்வாறு ஈடிவி பாரத் செய்தியாளர் தீபங்கர் போஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் டாக்டர் சுஜித் குமார் பட்டாச்சார்யா பதிலளித்தார்.

இதையும் படிங்க: திருவனந்தபுரம் ஐபிஎஸ் ஐஸ்வர்யாவுடன் சிறப்பு நேர்க்காணல்!

Last Updated : May 4, 2020, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details