தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செங்கோட்டையில் உயர பறக்க வேண்டியது மூவர்ண கொடியே...விவசாயிகள் பேரணி குறித்து சசி தரூர் - டிராக்டர் பேரணி

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்ததை கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், செங்கோட்டையில் உயர பறக்க வேண்டியது மூவர்ண கொடியே என தெரிவித்துள்ளார்.

சசி தரூர்
சசி தரூர்

By

Published : Jan 26, 2021, 7:09 PM IST

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், டெல்லி செங்கோட்டையின் மதில்களில் ஏறி தங்களின் கொடிகளை அவர்கள் ஏற்றினர். இதனை கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், செங்கோட்டையில் உயர பறக்க வேண்டியது மூவர்ண கொடியே என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் துரதிருஷ்டவசமானது. தொடக்கத்திலிருந்தே, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போதிலும், இதுபோன்ற அக்கிரமங்களை ஏற்று கொள்ள முடியாது. குடியரசு தினத்தன்று, செங்கோட்டையில் உயர பறக்க வேண்டியது மூவர்ண கொடியே" என பதிவிட்டுள்ளார்.

வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவ சேனா மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி சதுர்வேதி, "செங்கோட்டையில் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. அதுகுறித்த வெளியாகியுள்ள புகைப்படங்கள் கவலை அளிக்கிறது. மூவர்ண கொடி அவமதிப்புக்குள்ளாவதை ஏற்று கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் எவ்விதமான வன்முறை சம்பவங்களையும் ஏற்று கொள்ள முடியாது. சட்டமே உச்சபட்சமானது. எந்த பக்கமும் வெற்றியடையவில்லை. நாடுதான் தோல்வியை சந்தித்திருக்கிறது. குடியரசுக்கு தலைகுனிவான நாள்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details