தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மெழுகுவர்த்தி ஏற்றி நீதி கேட்ட பொதுமக்கள்!

டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மெழுகுவர்த்தி ஏற்றி நீதி கேட்ட பொதுமக்கள்
மெழுகுவர்த்தி ஏற்றி நீதி கேட்ட பொதுமக்கள்

By

Published : Dec 7, 2019, 11:41 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இருவர் உள்பட ஐந்து பேர் கடத்தி சென்று எரித்தனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் வீதியில் இறங்கி பேரணி நடத்தினர். டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் தொடங்கிய பேரணி இந்தியா கேட் வரை நீண்டது. 'நீதி வேண்டும்', பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் பேரணியை நடத்தினர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதிக்கு ஆதரவாகவும் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தடுப்பரண்களை தாண்டி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தண்டனைகள் கடுமையாக்க வேண்டும், விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் போன்ற கருத்துகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிரதமரின் கொள்கைகள் வெறுப்பை அடிப்படையாக கொண்டது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details