தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மம்தா பானர்ஜி மீதான மக்களின் கோபத்தை உணர முடிகிறது: மத்திய அமைச்சர் அமித் ஷா - மம்தா பானர்ஜி

பங்குரா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை உணர முடிவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

can-sense-public-anger-against-mamata-govt-shah-in-bengal
can-sense-public-anger-against-mamata-govt-shah-in-bengal

By

Published : Nov 5, 2020, 3:36 PM IST

மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு பகுதிகளிலும் பாஜக கட்சியினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து புரட்சியாளர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், '' நேற்று முன் இரவிலிருந்து நான் மேற்கு வங்கத்தில் தங்கியிருக்கிறேன். இங்கு வந்த நிமிடத்தில் இருந்து மக்களிடையே மம்தா பானர்ஜி மீது இருக்கும் கோபத்தை உணர முடிகிறது. இம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என நம்புகிறோம்.

மம்தா பானர்ஜி ஆட்சி முடிவுக்கு வருவதற்காக நேரம் வந்துவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையுடன் மேற்கு வங்கத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும். பாஜக தொண்டர்கள் மீது மாநில அரசு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவது கண்டனத்திற்குரியது'' என்றார்.

இதையும் படிங்க:அர்னாப் கைது: எமர்ஜென்சி ஏற்பட்டதுபோல் செயல்படும் பாஜக- சிவசேனா

ABOUT THE AUTHOR

...view details