நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 21ஆவது பிரிவின்படி நிறுவப்பட்ட நடைமுறைகள் எந்தவொரு நபரும் அவரது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்கக்கூடாது என்று தெளிவுப்படுத்துகிறது.
இதற்கிடையில் கரோனா கட்டுப்பாடுகள் வெகுஜன கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துமா? உலக குடிமக்கள் தவறாக பயன்படுத்தப்படமாட்டார்களா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது குறித்து எழுத்தாளர் இந்திரா சேகர் சிங் விவரிக்கிறார்.
தனிப்பட்ட தரவுகள்
கரோனா (கோவிட்-19) தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் நமது அரசாங்கம் வலிமையாக செயல்படுகிறது. மாநிலத் தலைவர்கள் வேறுபாடுகளை மறந்து வைரஸின் தாக்கத்திலிருந்து மனித குலத்தை காக்க ஒன்றாக நிற்கும்படி முறையிடுகின்றனர்.
இந்தியாவில் மக்கள் ஊரடங்கு 21 நாள்களுக்கு நீட்டிப்பு உண்மையில் உலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் சீனா, அமெரிக்க அரசாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்துடன் தனியார் நிறுவனங்களை தனிப்பட்ட தரவுகளை அணுக அனுமதிக்கின்றன.
சேகரிப்பு
முக அடையாள தொழில்நுட்பமும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த டென்சென்ட் மற்றும் அலிபாபா போன்ற நிறுவனங்கள் சீன அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பயண வரலாற்றை சேகரிக்க சீன அரசாங்கம் தொழிற்நுட்ப பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட இடங்களில் செலவழித்த நேரம், தனிப்பட்ட நபரின் தொடர்புகளின் விவரங்கள் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளின் உதவியுடன் அறிவார்கள். இதன்மூலம் தனிநபரைப் பற்றிய ஒவ்வொரு விவரமும் அறியப்படும்.
வண்ணக் குறியீடுகள்
சீனாவில் கரோனா பாதிப்பு குறித்த வழிமுறைகள் சேகரிக்கப்பட்டவுடன், மக்களுக்கு சுகாதார குறியீடுகளை ஒதுக்கப்பட்டது. அந்தக் குறியீடுகள் மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் காணப்பட்டது.
கரோனா வைரஸ் அறிகுறி காரணமாக ஒருவர் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா, இல்லையா? பொது போக்குவரத்தை பயன்படுத்தலாமா இல்லையா என்பதை வண்ண குறியீடுகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் சுதந்திரம் கேள்விக்குறி
இந்த தரவு சேகரிப்பில் பெரும்பாலானவை குடிமக்களின் விருப்பத்தால் அல்ல. தனிநபர் சீரற்ற பதில்களைக் கொடுத்திருந்தால் அல்லது வெறுமனே பொய் சொன்னால் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது.
கட்டாய நடவடிக்கைகள் அதைப் பின்பற்றுகின்றன. அனைத்து தனியுரிமை மரபுகளையும் அரசாங்கம் முறியடித்துள்ளது. மேலும் முடிவுகளை அடைய தனியார் நிறுவனங்கள் தொலைபேசிகள், கணினிகள், பொது கேமராக்கள் ஆகியவற்றைக் காண சுதந்திரமாக அனுமதிக்கிறது.
ரயில் அனுமதி மறுப்பு
இதனை சீன அரசு "பிளாக் மிரர்-எஸ்க்யூ மற்றும் டார்க்" சமூக கடன் அமைப்பு என்று அழைக்கிறது. இது தனிமனிதரின் ஒவ்வொரு செயலையும் நடத்தையையும் கண்காணிக்க அனுமதிக்கிறது. அரசு விதித்துள்ள வழிமுறைகளின்படி நடத்தை இணைந்திருந்தால் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும், இல்லையெனில் நீங்கள் ஒரு ரயிலில் கூட ஏற முடியாது.
சீன நாட்டின் ரயில் நிலையம் இதனை இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை ஊடக நிறுவனமும் உறுதிப்படுத்துகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுச் செய்திகளை அந்நிறுவனம் வெளியிட்டுவருகிறது. பொதுவாக ஸ்மார்ட்போன் இருப்பிடத் தரவை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் மொபைல் நெட்வொர்க் உடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் மக்கள் சமூக விலகலை பின்பற்றுகிறார்களா? கரோனா தொற்றுநோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும்.
மறைக்க ஏதுமில்லை
இஸ்ரேல் போன்ற நாடுகள், சமூக தொலைதூர வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைப் கண்காணிக்க மற்றும் செய்திகளை அனுப்ப மொபைல் கண்காணிப்பைப் பயன்படுத்துகிறது.
பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் அரசாங்கங்களுக்கு தரவை இலவசமாக வழங்குவதாக ஆவணம் செய்கின்றன. எனவே நீங்கள் எங்கிருந்தாலும், கரோனா வைரஸ் நெருக்கடி குறித்து அறியமுடியும். ஆகவே பொது சுகாதாரம் மற்றும் உங்களின் சொந்த நன்மைக்காக இதனை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் மறைக்க எதுவும் இல்லை.
வர்த்தக போர்
அமெரிக்க- சீனா வர்த்தகப் போர்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தின் மூலம் பங்குகளை அதிகமாக்குகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் அறிந்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்காணிக்கும்பொருட்டு, வெகுஜன கண்காணிப்பு முறையை உருவாக்க புளூடாட் என்ற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார்.
அடுத்தது என்ன?
உலகெங்கிலும் அவசரகால சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விரைவான தரவு சேகரிப்பு மற்றும் அதிகாரம் என அரசாங்கத்திற்கு "போரை" வழங்குகின்றன. புளூ டாட்டின் நிறுவனத்தைச் சேர்ந்த கம்ரான் கான் ஊடகங்களுக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில், “சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவோம் என்று அரசாங்கங்கள் நம்பாமல் இருக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம். இந்த வகை தொழில்நுட்ப வல்லுநர்களால் அரசாங்கங்கள் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மீதான பெரிய அவநம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
பொதுவாக கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் எடுத்துவரும் நடவடிக்கையின் உன்னதமான நோக்கங்களை சந்தேகிக்கவில்லை. ஆனால் அவை உண்டாக்கும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு உள்ளிட்டவைகள் அச்சத்தை அதிகரிக்கின்றன. மேலும் நமக்கு சில கேள்விகளும் தோன்றுகிறது. கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு என்னவாகும்?
வெகுஜன கண்காணிப்பு
வெகுஜன கண்காணிப்பு நிறுவனங்கள் போய்விடுமா? அல்லது மேன்மேலும் உருவாகுமா? உலக குடிமக்கள் தவறாக பயன்படுத்தப்படமாட்டார்களா? என்பன போன்ற கேள்விகள் எழுகிறது.
ஏனெனில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழிற்நுட்பத்துடன் இணையும் போது இத்திட்டங்கள் அசூர பலம் பொருந்தியதாக இருக்கும். அப்போது அதன் எஜமானர் அல்லது உரிமையாளர் அதிபதியாக இருப்பார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கன், "கிட்டத்தட்ட எல்லா ஆண்களாலும் துன்பத்தைத் தாங்க முடியும். நீங்கள் ஒரு ஆணின் தன்மையை சோதிக்க விரும்பினால் அவருக்கு அதிகார சக்தியைக் கொடுங்கள்" என்றார்.
செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் தலைவர்கள் உங்கள் தலைக்குள் பொத்தானைத் தொடும்போது என்ன நடக்கும். இந்த அமைப்பு கட்டுப்பாட்டுப் பெட்டியைத் திறக்கும். உலகின் சீசர்கள் அதன் இரத்தத்தை ருசித்தவுடன் அணிவகுப்பு நடக்கும்.
ஹிட்லரின் யூதர்கள்
கரோனா வைரஸின் பரவல், தீர்வு உள்ளிட்டவைகளில் உலக மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வெகுஜன கண்காணிப்பு சொந்த ஒப்புதல்களுடன் நம் வாழ்வில் நுழைகிறது. பயம் ஆட்சி செய்யும் போது அண்டை வீட்டுக்காரர் கூட எதிரியாக தெரிவார். ஆசிய வம்சாவளி மக்கள் ஹிட்லரின் யூதர்களாக மாறி வருகின்றனர். இன வெறுப்பு பற்றிய செய்திகள் அதிகரித்து வருவதால் நாம் உலகளவில் குழப்பத்தில் இறங்குகிறோம்.
உலக மக்களை வாட்டும் கரோனா அச்சம் தொழில்நுட்பத்தால் அதிகாரம் பெற்ற வெறுப்பு மற்றும் பயத்தின் மற்றொரு படுகொலைக்கு கரோனா உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். உலகப் போர்களில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்துவிட்ட நிலையில், தொழில்நுட்பம் இனப்படுகொலைக்கும் பயன்படுத்தப்படலாம் என்று உலகம் நம் பாடத்தைக் கற்றுக்கொண்டது. அணு குண்டுக்கான வாயு அறைகள் அனைத்தும் அவற்றின் காலத்தின் அதிநவீன விஞ்ஞானமாக இருந்தன. ஆனாலும் அவை ஒரு சாத்தானிய முனைகளுக்கு சேவை செய்தன.
எதிர்கால பயம்
தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான சாம்பியன்களான எலோன் மஸ்க் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் மற்ற விஞ்ஞானிகளுடன் ஏற்கனவே உலகை எச்சரித்திருக்கிறார்கள். உண்மையில் மஸ்க், “அணு ஆயுதங்களை விட செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மிகவும் ஆபத்தானது” என்று விவரிக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்ப கருவிகளால் ஜனநாயகம், தனியுரிமை மற்றும் மனிதநேயம் அச்சுறுத்தப்படுகின்றன.
கரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளி கரோனா நெருக்கடியை அனைத்து வழிகளிலும் சமாளிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் நமது வைத்தியம் அடுத்த நோயை விதைக்காதப்படி நாம் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இன்றைய அவசரக்கால அதிகாரங்கள் எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்தப்படலாம். ஆகவே அரசாங்கங்கள் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மற்றும் தரவு சேகரித்தல் உள்ளிட்ட நிறுவனங்களை சட்டமாக்குகின்றன.
நீங்கள் ஒரு ரகசியத்தை காக்க விரும்பினால் அது உங்களுக்குள்ளும் காக்கப்பட வேண்டும்.!
இதையும் பார்க்க: வீட்டில் இருந்து குடும்பத்தை காப்பாற்றுங்கள் - நடிகர் அர்ஜூன்