தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரதிதாசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் - Campus interview in Bharathidasan College

புதுச்சேரி: பாரதிதாசன் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 27 நிறுவனங்கள் பங்கேற்றதாக இக்கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சாய்பிரியா தெரிவித்துள்ளார்.

பாரதிதாசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

By

Published : Jun 1, 2019, 7:19 AM IST

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் ஐசிடி அகாடமி சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன், நிறுவனத்தினரை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பத்மா ஜெய்ஸ்வால் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ஆதித்யா பிர்லா, ஜஸ்ட் டயல், ஓமேகா ஹெல்த்கேர், டெக்னோ சாப்ட், வேர்ல்புல் இந்தியா உள்ளிட்ட 27 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள், பட்டதாரி இளைஞர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களிடம் தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்க்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சாய்பிரியா செய்திருந்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details