தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: பரப்புரை இன்றுடன் ஓய்கிறது! - ராகுல் காந்தி

பாட்னா: பிகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள சட்டபேரவைத் தொகுதிகளில் இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.

பீகார் தேர்தல்:  பரப்புரை இன்றுடன் ஓய்கிறது!
பீகார் தேர்தல்: பரப்புரை இன்றுடன் ஓய்கிறது!

By

Published : Oct 26, 2020, 11:01 AM IST

பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (அக்டோம்பர் 28ஆம்) தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இதன்காரணமாக, இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

மறுபக்கம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

243 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. இதில், 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details