தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுதப்படை காவலர்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு! - இருவர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

caf-personnel-opens-fire-kills-2-colleagues-injures-another
caf-personnel-opens-fire-kills-2-colleagues-injures-another

By

Published : May 30, 2020, 11:13 AM IST

சத்தீஸ்கர் மாநிலத்தின் சோட்டேடோங்கர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆம்டை காத்தி பகுதியில் ஆயுதப்படையின் ஒன்பதாவது பட்டாலியன் முகாமில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்து காவல் துறை ஆய்வாளர் சுந்தர்ராஜ் பேசுகையில், ''காவலர்களுக்கிடையே நடந்த சண்டை காரணமாக படைப்பிரிவுத் துணைத் தளபதி கான்ஷியம் குமெட்டி, தனது ஏகே-47 ரக துப்பாக்கியால் பிந்தேஷ்வர் சஹானி, ரமேஷ்வர் சாஹு ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் படைப்பிரிவின் மற்றொரு துணைத் தளபதி லச்சுரம் பிரேமிக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த பிரேமிக்கு ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது'' என்றார்.

இதையும் படிங்க:ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்த கணவர் - மனைவி தீக்குளித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details