தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: சத்தீஸ்கர் காவலர் படுகாயம்! - சத்தீஸ்கர்

ராய்ப்பூர்: நக்ஸலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சத்தீஸ்கர் ஆயுதப் படை காவலர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

chhattisgarh jawan killed IED blast in Chhattisgarh IED blast Chhattisgarh Armed Force சத்தீஸ்கர் நக்ஸலைட்டுகள் தாக்குதல்
chhattisgarh jawan killed IED blast in Chhattisgarh IED blast Chhattisgarh Armed Force சத்தீஸ்கர் நக்ஸலைட்டுகள் தாக்குதல்

By

Published : Jun 24, 2020, 12:00 PM IST

சத்தீஸ்கர் ஆயுதப் படை காவலர்கள், இன்று (ஜூன்24) அதிகாலை 3 மணியளவில் நாராயன்பூர் மாவட்டம் ஆர்ச்சா வனப்பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்தப் பகுதிகளில் மறைந்திருந்த நக்ஸலைட்டுகள் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலுக்கு காவலர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நக்ஸலைட்டுகள் ரிமோட் கன்டோரல் மூலம் வெடிகுண்டை இயக்கினார்கள். இதில் ஆயுதப்படை காவலர் ராகுல் சலாக் என்பவர் படுகாயம் அடைந்தார்.

நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: சத்தீஸ்கர் காவலர் படுகாயம்!

அவருக்கு ராய்ப்பூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியிலிருந்து ராய்ப்பூர் மருத்துவமனை 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதையும் படிங்க : பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details