ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் வருவாய் நுண்ணறிவு பிரவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே ஜிப்சம் ஏற்றி வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஜிப்சத்திற்கு அடியில் கஞ்சா மூட்டைகளை மறைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.
ஜிப்சத்துடன் கடத்திச் செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - cannbies
விஜயவாடா : ஜிப்சத்துடன் லாரியில் கடத்தி சென்ற ரூ. 2கோடி மதிப்புள்ள 1130 கிலோ கஞ்சாவை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
ஜிப்சத்துடன் கடத்திச் சென்ற ரூ.2கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அதனை மதிப்பிட்டதில் சுமார் 2 கோடியே 27 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,137 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.