மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடெகர் டெல்லியில் புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தீபாவளிக்குச் சிறிது நாட்களே இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதன்படி டெல்லியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசித்துவரும் 40 லட்சம் டெல்லி வாசிகளுக்கு பட்ட வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "இதன்மூலம் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசித்துவரும் மக்களுக்குத் தேவையான உரிமைகள் கிடைக்கும். இந்த பட்டாவைப் பெற ரூ. 200 செலுத்தினால் போதும். இதை மக்களுக்கு இலவசமாகவே கொடுக்கலாம். ஆனால், சட்டப்பூர்வமான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாலேயே குறைந்தபட்ச கட்டணத்துடன் இதை நடைமுறைப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார்.