கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணியாமலும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் மக்கள் வெளியே செல்கிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெருந்தொற்று வழிகாட்டுதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா தடுப்பூசி இல்லாதபட்சத்தில் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை ஒழுங்காக கழுவுவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.