தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு முழுவதும் இ-சிகரெட்டிற்குத் தடை! அதற்கான காரணம் தெரியுமா? - Finance Minister Nirmala Sitharaman

டெல்லி: நாடு முழுவதும் இ-சிகரெட்டிற்குத் தடை விதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இ-சிகரெட்

By

Published : Sep 18, 2019, 6:06 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் இ-சிகரெட் புழக்கம் 77% அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இ-சிகரெட்டிற்குத் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இனிமேல் இ-சிகரெட்டை உற்பத்தி செய்யவோ, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யவோ, விற்பனையோ, விளம்பரமோ செய்யவோ கூடாது என்றும், அதனை மீறினால் ரூ.1 லட்சம் அபராதமும் ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை இந்தியாவில் 400க்கும் அதிகமான இ-சிகரெட் பிராண்டுகள், அதில் 150க்கும் மேலான ப்ளேவர்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவு அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப்பின் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்படும் என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details